திங்கள், 13 ஜூலை, 2020

அழகு குறிப்புகள்

முகம் பளிச்சிட ஒரு  குறிப்பு





மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி  விடலாம்.


  • கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு  முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள்  ஏற்படாமலும் தடுத்திடும்.

  • உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,  அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.


                            

  • வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள்  தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து  வந்தால், உங்கள் முகம் பளிச் பளிச்தான்.

தினம் ஒரு மூலிகை - தண்ணீர்விட்டான் மூலிகை

தண்ணீர்விட்டான் மூலிகை




                                                தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.



மருத்துவப் பயன்கள்


1. தண்ணீர்விட்டான் கிழங்கு பால் சேர்த்து அரைத்துக் காயவைத்து பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும்.

2. தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் உடல் உஷ்ணம், வெட்டைச் சூடு குணமாகும்.

3. தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.

4. தண்ணீவிட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, சாலாமிசரி – தலா 100கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்தால் ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

5. தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்






6. அழகிற்காக வளர்க்கப்படும் வகையும் உள்ளது. இது சிறுசெடி அமைப்பில் வளரும். இதனுடைய வேர்கள் பெரியதாக இருப்பதில்லை.

7. உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.

8. ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.

9. மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.

10. கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.




தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்: ( Asparagus Drink Recipe)




                                பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.வேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்.

தினம் ஒரு மூலிகை - கற்றாழை

கற்றாழை


                        
                            கற்றாழை ஒரு குளிர்ச்சி தன்மையுடைய பொருள் என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த கற்றாழை ஜெல், பல மருத்துவ பயன்களை கொண்டது. பல ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வாக அமைகின்றது. கற்றாழையை பயன்படுத்தக்கூடிய மூன்று வழிகளை அறிந்து கொண்டு, அதை உங்கள் சரும நல முறையில் சேர்த்துக்கொண்டு, மாசு மருவில்லா பொலிவான சருமத்தை பெறுவது எப்படி? என அறிந்து கொள்ளுங்கள்.




                
செடியில் இருந்து இயற்கை கற்றாழையை எடுத்துக்கொள்ளுங்கள்

                                            கற்றாழை இலை இன்றை கத்திரித்து, அதன் முள்களை நீக்கிவிட்டு அதன் சாற்றுப்பகுதியை முகத்தின் பக்கவாட்டில் பூசிக்கொள்ளவும். செடியில் இருந்து கத்தியை கொண்டும் கொஞ்சம் சாற்றை அகற்றி பயன்படுத்தலாம். இரண்டு இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு போதுமானது. தேவை எனில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம். இதில் கொஞ்சம் பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் இரவு படுக்கச்செல்லும் முன் தடவிக்கொள்ளவும். இரவு அப்படியே விட்டு விட்டு காலை எழுந்ததும் கழுவிக்கொள்ளவும்.



 நீங்களே செய்யக்கூடிய ஆலோவேரா பேஸ் மாஸ்க்

                                                    எண்ணெய் பசை/ கலைவயான தன்மை கொண்ட சருமத்திற்கு: எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், உங்கள் சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெயை, பருக்களை அகற்ற உதவும் கற்றாழை மாஸ்க் இது. ஒரு கோப்பையில் கற்றாழை சாற்றை எடுத்துக்கொள்ளவும். அதில் 10 முதல் 12 சொட்டு டீ டிரி ஆயில் விடவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தில் பூசிக்கொண்டு, காலையில் கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இவ்வாறு பயன்படுத்தவும்.


உலர் சருமத்திற்கான கற்றாழை
                                                                
                            உலர் சருமத்திற்கு: உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர் கழுவிக்கொள்ளவும்.