ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

தினம் ஒரு மூலிகை : சீரகம் (Cumin)

 

சீரகம்

 உணவே மருந்து மருந்தே உணவுஎன்பது தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்தசித்த மருத்துவத்தின்” தலையாய கோட்பாடாகும். நமது நாட்டினர் உணவு தயாரிக்கும் போது உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் பல பொருட்களை அந்த உணவில் சேர்த்தே சமைக்கின்றனர். அப்படி உணவில் சேர்க்கப்படும் பல மகத்துவம் கொண்ட ஒரு உணவு பொருள் தான் சீரகம். இந்த சீரகத்தை கொண்டு தயாரிக்க படும் சீரக தண்ணீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.


சீரகம் தண்ணீர்

சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.  பின், வெது வெதுப்பானவுடன் குடிக்க வேண்டும் பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் இயற்கை மருந்தாக சீரகம் உள்ளது. ”ஆரோக்கியமான உடல்நலத்திற்கு கண்டிப்பாக தினமும் சீரக தண்ணீர் குடிக்க வேண்டும்”


சீரகம் தண்ணீர் பயன்கள்


அசீரணம்

இரவில் நேரம் கடந்து உண்பதாலும், பசி எடுப்பதற்கு முன்பே அடுத்த வேளை உணவை உண்பதாலும் பலருக்கும் வயிற்றில் உப்பசம், அசீரணம் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இப்படியான சூழ்நிலைகளில் அரை டீஸ்பூன் சீரகத்தை சிறிது நீரில் போட்டு வேக வைத்து குடித்தால் அசீரணம், வாயு தொந்தரவுகள் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

தோல் பளபளப்பு

 சீரகத்தில் மனிதர்களின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்தும் சக்தி இருக்கின்றன. எனவே தினந்தோறும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது சீரகம் கலந்த தண்ணீரை பருகி வந்தால் தோலின் பளபளப்பு தன்மையை கூட்டி, இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது. தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

ஞாபக சக்தி

சீரக தண்ணீரை தினமும் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செல்கள் புத்துணர்ச்சியடைகின்றன. இதனால் உடலில் நல்ல சுறுசுறுப்பு தன்மை ஏற்படுகிறது. சிலருக்கு எதையும் சீக்கிரத்தில் மறந்து விடும் நிலை இருக்கும் அப்படிப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறையேனும் சீரக தண்ணீரை பருகி வந்தால் ஞானசக்தி அதிகரிக்கும்.

 நச்சு நீக்கி

நாம் உண்ணும் உணவு பொருட்களை எப்படி தூய்மை படுத்தினாலும், அதில் சிறிதளவாவது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நுண்கிருமிகளும் ரசாயனங்களும் இருக்கவே செய்கிறது. எனவே வாரம் இருமுறை சீரக தண்ணீரை அருந்துபவர்களுக்கு அவர்கள் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் சிறுநீர், வியர்வை வழியாக வெளியேறும்.

நோய் எதிர்ப்பு சக்தி

சீரகத்தில் வைட்டமின் மாற்று வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளன. இந்த இரண்டு சத்துகளும் உடலின் வெளிப்புறதிலிருந்து வரும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை தடுக்கிறது. சீரக தண்ணீர் இரும்பு சத்து அதிகம் கொண்டிருப்பதால் உடலுக்கு கூடுதல் பலத்தையும் தருகிறது.

 ரத்த சோகை

உடலில் ஓடும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்த சோகை நோய் உண்டாகிறது. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு சீரக தண்ணீரை குடித்து வந்தால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இழந்த உடல் சக்தியையும் மீட்டு தரும்.


சளி தொந்தரவு

சீதோஷண மாறுபாடுகளாலும், குளிர்ந்த பானங்களை அதிகம் பருகுவதாலும் சிலருக்கு நெஞ்சில் சளி கோர்த்து கொண்டு மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் சுவாசிக்கும் போது சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்னைகளால் அவதியுறுபவர்கள் தினமும் காலையில் சீரக தண்ணீரை இளம் சூடான அதில் அருந்துவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தூக்கமின்மை

ஒரு சிலர் நன்றாக உறங்க முடியாமல், தினந்தோறும் இரவில் பலமணி நேரம் விழித்திருக்கும் நிலை ஏற்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனை பிற்காலங்களில் பல உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு சிறிது சீரக தண்ணீரை அருந்தி வந்தால் தூக்கமின்மை நீங்கும்.

நீரிழிவு

நீரிழிவு நோயால் அவதியுறுபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை அருந்துவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ஏற்படும் புண்கள், காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.

பால் சுரப்பு

குழந்தை பெற்ற பெண்கள் சிலருக்கு என்ன காரணத்தினாலோ தாய்ப்பால் சுரப்பு குறைந்து விடுகிறது. இப்படி தாய்ப்பால் சுரப்பு குறையும் காலங்களில் தொடர்ந்து காலை மாலை என இருவேளைகள் சீரக தண்ணீரை குழந்தை பெற்ற பெண்கள் அருந்தி வருவார்களேயானால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

எடை குறைப்பு

 உடல் பருமன் கொண்டவர்கள் அவர்களின் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவராவிடில் பல விதமான ஆரோக்கிய குறைவுகளை எதிர்காலங்களில் எதிர்கொள்ள நேரிடும். உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றோடு சீரக தண்ணீரையும் தினந்தோறும் சிறிதளவு அருந்தி வர உடலை எடை நன்கு குறையும்.


தினம் ஒரு மூலிகை : கல்கரைச்சி / இரணகள்ளி / கல்லுறிஞ்சி

 கல்கரைச்சி

கல்கரைச்சி செடியை நாம் வளர்ப்பது சுலபம் இதனை நாம் பயன் படுத்துவதும் சுலபம் இதன் இலைகளை சாப்பிட்டலை போதும் அது ஒரு மாபெரும் அருமருந்தாகும் நமக்கு பெரும் செலவு வைக்ககூடிய வயிற்றில் ஏற்படும் கல்லை இது கரைத்துவிடும் அதைப்பற்றி பார்ப்போம்.

கல்கரைச்சி ஓர் செடி வகையை சார்ந்த தாவரம், இலைகள் நீள்  வட்ட வடிவில் நீர் பற்று அதிகமாக காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவுகளாக காணப்படும். இது ஓர்விதையற்ற தாவரம், இதன் இலைகளின் விளிம்புகளில் இருந்து புதிய கன்றுகள் வளர்வதை காணலாம். 

சிறுநீரக கற்களை கரைக்க இந்த  மூலிகை செடியின் இலை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரகத்தில் உருவகும் எவ்வளவு பெரிய கற்களையும் மிக எளிதில் கரைத்து துகள்கலாக  சிறுநீர் கழிக்கும் போது எவ்வித வலியும்மின்றி வெளியேற்றுகிறது


கல்கரைச்சி மூலிகையை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்

      
கல்கரைச்சி செடியை மண்ணில் இருந்து பிடிங்கி எடுக்க வேண்டாம். உயிருடன் இருக்கும் செடியின் இளந்தழையில் இருந்து சாப்பிட வேண்டும், அதாவது முதல் நாள் அன்று செடியில் உள்ள மிகச் சிறிய இலையில் அரம்பித்து பெரிய இலைகள் வரை 7 நாட்கள் வரை மட்டும் சாப்பிட்டு வர சிறுநீரக கல் இருந்த இடம் தெரியமல் மறைந்துவிடும்.

 கல்கரைச்சி இலைகள் எப்படி தேர்வு செய்து சாப்பிடுவது என்று பார்ப்போம்

கல்கரைச்சி இலைகளை  7 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வர நோய் பூரண குணம் அடையும். முதல் நாள் மிகச்சிறிய இலையில் இருந்து தான் சாபிட ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் சற்று பெரிய இலை, அதற்க்கு அடுத்த நாள் அதைவிட சற்று பெரியது இப்படி படி படியாகதான் சாப்பிட வேண்டும்.

உணவு பத்தியம் உண்டு:

பாலும் பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி, மீன்முட்டை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:-
 ஒரே நாளில் அதிகப்படியான இலைகளை சாப்பிட்டால்உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.