கற்றாழை
கற்றாழை ஒரு குளிர்ச்சி தன்மையுடைய பொருள் என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த கற்றாழை ஜெல், பல மருத்துவ பயன்களை கொண்டது. பல ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வாக அமைகின்றது. கற்றாழையை பயன்படுத்தக்கூடிய மூன்று வழிகளை அறிந்து கொண்டு, அதை உங்கள் சரும நல முறையில் சேர்த்துக்கொண்டு, மாசு மருவில்லா பொலிவான சருமத்தை பெறுவது எப்படி? என அறிந்து கொள்ளுங்கள்.
செடியில் இருந்து இயற்கை கற்றாழையை எடுத்துக்கொள்ளுங்கள்
நீங்களே செய்யக்கூடிய ஆலோவேரா பேஸ் மாஸ்க்
எண்ணெய் பசை/ கலைவயான தன்மை கொண்ட சருமத்திற்கு: எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், உங்கள் சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெயை, பருக்களை அகற்ற உதவும் கற்றாழை மாஸ்க் இது. ஒரு கோப்பையில் கற்றாழை சாற்றை எடுத்துக்கொள்ளவும். அதில் 10 முதல் 12 சொட்டு டீ டிரி ஆயில் விடவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தில் பூசிக்கொண்டு, காலையில் கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இவ்வாறு பயன்படுத்தவும்.
உலர் சருமத்திற்கான கற்றாழை
உலர் சருமத்திற்கு: உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர் கழுவிக்கொள்ளவும்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக