அதிமதுரம்
உலகில் அனைத்து மருத்துவ முறைகளில் பங்கு வகிப்பதோடு, ஆயுர்வேத மருத்துவ முறையில் முக்கிய பங்கு வகிக்கும் அதிமதுரம் எனும் மூலிகையின் தன்மை மற்றும் மருத்துவ குணங்களை பற்றி இப்பதிவில் நாம் அறிந்து கொள்ள முடியும்.
குன்றிமணி” என்னும் செடியின் வேர் பகுதியே “அதிமதுரம்” ஆகும். இது ஆங்கிலத்தில் “லிகோரிஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது அனைத்து மருத்துவ முறைகளிலும் உபயோகப் படுத்தப்படுகிறது. அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது
மருத்துவ முறைகள்
குறிப்பு:
கீழ்வரும் பகுதியில் அதிமதுரம் என குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே அதிமதுரத்தின் காய்ந்த வேர்பகுதியே ஆகும்.
இருமல் கட்டுப்பட:
அதிமதுரம் 50 கிராம், மிளகு 10 கிராம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, இளவறுப்பாக வறுத்து, தூள் செய்து கலந்து வைத்து கொண்டு, 1 தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்து சாப்பிட்டுவர வேண்டும். வறட்டு இருமல் சிறிதளவு அதிமதுரத்தை வாயிலிட்டு ஊறவைத்து மென்றும் சாப்பிடலாம்.
வயிற்றுப்புண் குணமாக:
50 கிராம் அதிமதுரத்தை இலேசாக இடித்து, 1.5 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 1/4 லிட்டர் ஆகக் குறையும் வரை காய்ச்சி, அத்துடன் 150 கிராம் சர்க்கரை, 1/4 லிட்டர் பால் ஆகியவை சேர்த்து, பாகுபதம் வரை காய்ச்சி வடிக்க வேண்டும். சூடு ஆறிய பின்னர் கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும். இதில், 2 தேக்கரண்டி அளவு, 1/2 டம்ளர் வெந்நீரில் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் 2 வாரங்கள் உணவுக்கு பின்னர் சாப்பிட்டு வர வேண்டும்.
காயங்கள் மற்றும் வெட்டுக்காயங்கள் குணமாக:
தேவையான அளவு அதிமதுரத்தூளை நெய் சேர்த்து, பச்சையாகக் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில பூசவேண்டும்.
நரம்பு தளர்ச்சி கட்டுப்பட:
1/2 தேக்கரண்டி அதிமதுர பொடியை, சிறிதளவு தேனுடன் குழைத்து, காலை மாலை வேளைகளில் 48 நாட்கள் வரை சாப்பிட்டுவர வேண்டும்.
தலைவலி, ஒற்றை தலைவலி குணமாக:
அதிமதுரம், பெருஞ்சீரகம், சர்க்கரை சம அளவாக எடுத்துக்கொண்டு நன்றாக தூள் செய்துகொள்ள வேண்டும். இதனை, முதலுதவி மருந்தாக, 1 தேக்கரண்டி அளவு, சிறிது வெந்நீருடன் சேர்த்து உள்ளுக்கு சாப்பிடலாம்.
கருவளர்ச்சிக்கு :
அதுமதுரம் கருப்பை நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகின்றது குழந்தை பெறின்மை இல்லாதவர்கள் அதிமதுரம், திராட்சை இரண்டையும் சம அளவு எடுத்து நீர் விட்டு அரைத்து அதனை பாலில் கலந்து குடிக்க வேண்டும். எப்போது குடிக்க வேண்டுமென்றால் மாதவிடாய் ஆரம்பித்த முதல் நாளிலிருது தொடன்ர்து 5 நாட்களுக்கு குடித்து வந்தால் குழந்தைப் பேறு உண்டாகும்.
ஆண்மை பெருக :
பாலில் அதிமதுரப் பொடி மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். ஆண்மை பெருகும்.
மலச்சிக்கல் நீங்கும் :
தினமும் இரவில் அதிமதுரச் சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால் மறு நாள் இலகுவகா தடையின்றி இருக்கும். மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
தாய்ப்பால் சுரக்க :
தாய்ப்பால் சரிவர சுரக்காதவர்கள் அதிமதுரச் சூரணத்தை பாலில் கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்க ஆரம்பிக்கும்.
ஆஸ்துமா :
அதிமதுரம், முசுமுசுக்கை இலை மற்றும் கரிசலாங்கண்ணி இலைகள் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சிறிது கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரையை கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமா படிப்படியாக குணமாகும்.
வறட்டு இருமல் :
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம ஆளவில் எடுத்து லேசாக வறுத்து, பொடி செய்து அதிலிருந்து சிறிது எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் உண்டாகும் வறட்டு இருமல் குணமாகும்.
கபம் கரைய :
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் போட்டடு அடக்கிக் கொண்டிருந்தால் சுர்க்கும் உமிழ் நீரை அப்படியே விழுங்க வேண்டும்.இப்படி செய்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். .தொண்டையில் உள்ள கபம் கரைந்து விடும்.
சொட்டை :
அதிமதுரத்தை எருமைப் பால் விட்டு விழுதாகும் வரை நன்றாக அரைத்து அதனை சொட்டையிருக்கும் இடத்தில் தேய்த்து வந்தல வழுக்கை தலையில் முடி வளர ஆரம்பிக்கும். பொடுகு, புண், பூச்சி வெட்டு போன்றவையும் குணமாகும்
.
இள நரை :
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். முடி உதிர்தல் உண்டாகாது.
அல்சர் :
அதிமதுரப் பொடியை நீரில் கலந்து அதனை அரிசி கஞ்சியுடன் கலந்து குடித்து வந்தால் அல்சர் போன்ற்ற வயிற்றுப் புண்கள் குணமாகும். அதிமதுரத்திய வயிற்றுப் பிரச்சனைகளுக்கு பொடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்
மூட்டு வலிக்கு :
ஆதிமதுரக் கசாயத்தை கசாயமாக காய்ச்சி அதனை இரவில் குடித்து வந்தால் மூட்டு வலிகள் குணமாகும்.
