ஞாயிறு, 12 ஜூலை, 2020

தினம் ஒரு மூலிகை - பனை நுங்கு



நுங்கு 


             

                                                      கோடைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது, நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மேலும் இது உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

 மருத்துவப் பயன்கள் :

  •  நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்
  •  நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.
  •  பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.
  •  பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.
  • உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.
  •  கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
  •  இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
  • நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.
  • பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.
  •  நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.
  •  கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.
  •  பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.
  • நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.

தினம் ஒரு மூலிகை - தேங்காய் பால்

தேங்காய் பால்



தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால் பகிர்ந்து கொள்ளுங்கள். மக்கள் அறிந்து கொள்ளட்டும்!தேங்காய் பயன்பாடு மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர்.
உண்மை இதோ, பச்சை தேங்காயின் பயன்கள்:-

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்...

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும்!

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம்.

சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்!

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை: நாம், அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம். அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும். இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்



குறிப்பு:

  • தேங்காயை குருமா வைத்து சமைத்து உண்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.
  • சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு (கொலஸ்ட்ரால்).


  • தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக அளியுங்கள்!அவ்வளவு ஆரோகியம்.

  • பழங்காலத்தில், இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள். ஆனால் இப்போது, மாட்டு பால் ஊற்றி துக்கத்தில் ஆழ்கிறார்கள்.

  • தாய்ப்பாலுக்கு மாற்றாக, தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்! ஆனால் இப்போது, இரசாயண கலவையுடன் பாக்கெட் பால்!

  • காலையில் தேங்காயை துருவி, அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது தேன் சேர்த்து, (பாக்கட் பாலை தவிர்த்து விட்டு), அதற்கு பதிலாக தந்து பாருங்கள் ஆரோகியத்தை.!

தினம் ஒரு மூலிகை



தினம் ஒரு மூலிகை

                                           

                                         ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள் மற்றும் மூலிகைச்சாறு குடித்தால் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு பற்றிப் பார்க்கலாம்.



திங்கள் – அருகம்புல்



 
ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
இதனால் இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், போன்ற பிரச்சனைகள் குறையும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

 

செவ்வாய் – சீரகம்


                                       
 இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடித்தால் இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு ஆகும்.

ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிற்று எரிச்சல் நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.


புதன் – செம்பருத்தி


                                     

  இரண்டு செம்பருத்தி பூ, இரண்டு டீஸ்பு+ன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடித்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும்.

முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும். தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.


 


வியாழன் – கொத்தமல்லி

                                                     

                                       

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடித்தால் அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிச்சல், எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.


 

வெள்ளி – கேரட்

                                                

                                    

ஒரு கேரட் (உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடித்தால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும்.

கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.


சனி – கரும்பு சாறு                      


     கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடித்தால் காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன் குறையும்.


ஞாயிறு – இளநீர்

                                 

  ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும்.

இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கும்.

பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.