சனி, 11 ஜூலை, 2020

தினம் ஒரு மூலிகை - திராட்சை ஒயின்


                          திராட்சை ஒயின்
   
                                       
                                       
 
ஒயினை மிதமான அளவு குடிப்பதால் நன்மைகள் கிடைக்கும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அது இதயத்துக்கு நல்லது என்றும், ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை சீரமைக்கும் என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பளப்பளப்பான சருமத்தையும் தரும்.

 

                                         ஒயின் ஃபேஷியல் என்றால் என்ன?  

     

           
 

ஒயின் ஃபேஷியல், ராப், எக்ஸ்ஃபோலியண்ட், குளியல் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய அழகு சிகிச்சை முறை வந்துள்ளது. அதன் பெயர் ஒயினோதெரபி என்கிறார்கள். இவற்றில், ரெட், ஒயிட் அல்லது ரோஸ் ஒயின், மூலிகைகள், மற்ற எசன்ஷியல் ஆயில்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி சருமத்தை சீரமைத்து, முதுமைத் தடுப்பு சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.



கொஞ்சம் சயின்ஸ்

சிவப்பு திராட்சையின் விதைகள், தோல், இலைகள் ஆகியவற்றில், ஆண்டோசயனோசைட்ஸ், பாலிஃபீனால், பிரோசயனோடல்ஸ் போன்ற உட்பொருள்கள் உள்ளன. இவற்றில் வைட்டமின் ஈயைவிட அதிகமான ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒயின்களில் இயற்கையான அழற்சி தடுப்பு உட்பொருள்களும் உள்ளன. கொலாஜன், எலாஸ்டிக் ஃபைபர்களை மீட்டமைப்பதன் மூலம் முதுமையை ஒயின் தடுப்பதாக கூறப்படுகிறது. இவை சுருக்கங்களை சரிசெய்து, தொங்கும் சருமத்தை மீட்டமைக்க உதவுகின்றன. சருமத்துக்கு இதமளித்து, இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது.


 ஒயின் ஃபேஷியல்: முகத்தை ஸ்டீமிங், கிளென்சிங் செய்த பிறகு, ஒயின், மூலிகைகள், பழங்கள், எசன்ஷியல் ஆயில்களின் கலவை முகத்தில் பூசப்பட்டு மசாஜ் செய்யப்படும். சரும வகையைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படும் ஒயினும் மாறுபடும். மசாஜ் முடிவடைந்ததும், ஒயின் கவனமாக சுத்தம் செய்யப்பட்டு, அழகை நீடித்திருக்க செய்ய விசேஷ சீரம் ஒன்றினால் லாக் செய்யப்படும். 



ஒயின் பாத்:
 விலை அதிகம் (குளிக்கும் தண்ணீரில் ஒயினை கலப்பார்கள்). சருமத்துக்கும் உணர்வுகளுக்கும் இதமளிக்கும். ஒயினும், எசன்ஷியல் ஆயில்களும் நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலக்கப்பட்டு, அந்த தண்ணீரில் நீங்கள் நீண்ட நேரம் ஊறுவீர்கள்.


ஒயின் ஸ்கிரப்:   
 இது குறிப்பிட்ட சீசனில் கிடைக்கும். சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. ஒயின் தயாரிப்பின்போது மீதமான திராட்சை தோல்கள் ஸ்கிரப்பாக பயன்படுத்தப்படும், கூடுதல் பலன்களுக்கு கொஞ்சம் ஒயினும் சேர்க்கப்படும். ஸ்கிரப்பிங் முடிவடைந்தவுடன், சானா/ஸ்டீம் பாத், பின்னர் சாதாரண குளியல்.

தினம் ஒரு மூலிகை - நெருஞ்சிமுள்


நெருஞ்சிமுள்



                                                  நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும். கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன் தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இது ஒரு முட்செடி., சிறு சிறு முற்கள் உண்டு. இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணலாம். மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும். இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர்.பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்.இதன் இலையை ஒரு குவளை தண்ணீரில் சிறிது நேரம் இட்டால் ,தண்ணீர் அடர்த்தி மிகுந்து கெட்டியாகிவிடும் .பார்ப்பதற்கு அதிசியமாக இருக்கும் .எண்ணெய் போல் பிசுபிசுப்பு ஆகிவிடும் .இதுவும் ஒரு மருந்து ,இது காமவர்த்தினி .ஆண்மை பெருக்கி மேலும் இது பட்டுத்துணிகளைச் சுத்தப்படுத்தும்.யானை நெருஞ்சலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும். இது எந்த ரசாயனமும் இல்லாமல் இயற்கை முறையில் பட்டு முதலிய துணிவகைகளை சுத்தம் செய்து கரைகளை எடுக்கும் .ஒரு பயோ சலவையகம் கூட துவக்கலாம்.

சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும்.பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும் இவை குணத்தில் மாறுபடுவதில்லை. இதன் இனப்பெருக்கம் விதைமூலம் செய்யப்படுகிறது. இது குளிர்ச்சி உண்டாக்கி , சிறுநீர் பெருக்கி , உரமாக்கி , உள்ளழலகதறி , ஆண்மைப்பெருக்கி, நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இவ்வுப்புகள் சில வேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும். நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் . சாப்பிட்டுப்பார்த்தால் தான் தெரியும் அதன் வலிமை. நம்மிடையே இருக்கும் ஆண்மை பெருக்கி மருந்துகள் பல இன்னும் சரிவர பயன்படுத்தாமல் இருக்கிறது .நெருஞ்சல் வித்தினைப் பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும்.




நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும். சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும். டயாலிசிஸ் செய்தது லக்ஷக்கணக்கில் பணத்தையும் உடல் நலத்தையும் இழக்கவேண்டாம்.

தினம் ஒரு மூலிகை - திரிபலா


திரிபலா சூரனம்


திரிபலா பொடி

நெல்லிக்காய்கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த ஒரு பாரம்பர்ய மருந்து திரிபலா. அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

செய்முறை




கடுக்காய்த்தோல் – 100கிராம்
நெல்லிவற்றல் – 100கிராம்
தான்றிக்காய்த்தோல் – 100கிராம்

மூன்றையும் தனித்தனியாகப் பொடித்து சலித்து,சம அளவு கலந்து கொண்டால், திரிபலா சூரணம் தயார்!

அளவு: ஒன்று முதல் மூன்று கிராம் வரை

திரிபலா தரும் நன்மைகள்

  • ஆரம்ப நிலை சர்க்கரை நோயர்கள்,பரம்பரையில் சர்க்கரை நோயுள்ளவர்கள், மூன்று கிராம் அளவு சூரணத்தை வெந்நீருடன் கலந்து காலை,மாலை பயன்படுத்தினால் சர்க்கரை நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
  • வறட்டு இருமலினால் அவதியுறுவோர்,ஒரு கிராம் அளவு திரிபலா சூரணத்தை வெந்நீருடன் கலந்து குடிக்க நல்ல குணம் கிடைக்கும்.
  • வயிற்றுவலி,நெஞ்செரிச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள்,ஒரு கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் நலம் பெறலாம்.
  • மலச்சிக்கலுக்கு இரண்டு கிராம் சூரணத்தை,வெந்நீருடன் கலந்து இரவு தூங்கும் முன் பருகி நிவாரணம் பெறலாம்.
  • மலம் கழிக்கையில் இரத்தம் வருதல்,பெண்களுக்கு ஏற்படும் அதிஇரத்தப்போக்கு,பௌத்திர நோயில் காணும் சலம் இவற்றிற்கு,1-2 கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து காலை-மாலை உண்ண நோய் நீங்கி நலம் பெறலாம்.
  • உடற்பருமனை குறைக்க விரும்புபவர்கள்,காலை மாலை உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சூரணத்தை சுடுநீருடன் கலந்து பருகலாம்.
  • 50 வயதுக்கு மேற்பட்டோர்,நோய் வராது தடுக்கும் காயகற்ப மருந்தாக திரிபலா சூரணத்தை மாலையில் உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சுடுநீருடன் கலந்து பருகலாம்.
  • முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
  • இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
  • உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
  • வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.
  • ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
  • கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
  • உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.
  • ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.
  • மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.
  • உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.
  • பற்பொடியாக பயன்படுத்த,பற்கூச்சம்,பல்வலி,ஈறுவீக்கம் குணமாகும்.

எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?


  •  குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து 
  •  மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
  • வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.
  •  பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.
  •  கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.



தினம் ஒரு மூலிகை - சாதிக்காய் (Nutmeg )

சாதிக்கும் காய்... ஜாதிக்காய்


ஜாதிக்காய் தரும் பலன்கள் எண்ணற்றவை


                                            உலகையே வசீகரித்த ஒரு மூலிகை, ஜாதிக்காய். அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் தரும் பலன்கள் எண்ணற்றவை! 

மலேஷியாவில் பினாங்கிலும், நம் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் உற்பத்தியாகிறது ஜாதிக்காய். உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் ஜாதிக்காய் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளம். இதற்குக் கிடைத்த அதீத வரவேற்பால், அரபுநாட்டு மாலுமிகள் இதை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதையே பல நூறு ஆண்டுகளாக பெரும் ரகசியமாக வைத்திருந்தார்களாம். 

ஜாதிக்காயின் கனி, ஊறுகாயாகப் பயன்படும், இதன் உள்ளே இருக்கும் விதைதான் ஜாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் ஜாதிபத்திரி. இதில் விதையும் ஜாதிபத்திரி இதழும்தான் மணமும் மருத்துவக்குணமும் கொண்டவை. 

`தாதுநட்டம்’ எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு, `சுவாசகாசம்’ எனும் ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு, சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பரிந்துரைக்கிறது. ஆனாலும் இது அதிகம் பயன்படுவது, ஆண்களுக்குக் காமப் பெருக்கத்துக்கும் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான். 

ஜாதிக்காயில் நம்மை அடிமைப்படுத்தும் போதைப்பொருள், அதன் சத்துக்களில் உள்ளதோ என்கிற சந்தேகம்கூட இடையில் வந்தது. ஆனால், பல ஆய்வுகளைச் செய்து, அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும், போதையூட்டும் வஸ்து அல்ல எனக் கண்டறிந்தனர். 

சாதனை படைக்கும் ஜாதிக்காய்! 

* `நரம்பு மண்டலத்தில் நற்பணி ஆற்றுவதால், மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும், ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்’ என்கிறது இன்றைய அறிவியல். 

* ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது’ என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள். 

 , *ஜாதிக்காய்,சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும். மேலும், வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் அத்தனை வயிற்றுப் போக்குகளுக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்து. 

* இனிப்புச் சுவையுடன் கூடிய தனித்துவ மணம் ஜாதிக்காயில் இருப்பதற்கு அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்துதான் காரணம். தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, ஜாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தை ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் சேர்க்கிறார்கள். 

* ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது சாப்பிடுவது, மனஅழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், சீரான தூக்கத்தையும் தரும். 

* குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள். 

* ஜாதிக்காய், சணல் விதை, ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம், வெண்கொடிவேலி வேர் (அத்தனையையும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்) சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றை நன்கு நுண்ணியமாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதை வயிற்றுவலி, மாதவிடாய் தீவிர வலி, மைக்ரேன் தலைவலி ஆகியவற்றுக்குக் கொடுக்கலாம். இவற்றுக்கு இந்த மருந்து உடனடி வலி நிவாரணி! 

மொத்தத்தில் ஜாதிக்காய் நல்லன பலவற்றைச் சாதிக்கும் காய்.