புதன், 15 ஜூலை, 2020

தினம் ஒரு மூலிகை - பலாப்பழம்

பலாப்பழம்


முக்கனிகளுள் இரண்டாவது கனி பலாப்பழம். இந்தப் பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.


மருத்துவப் பயன்கள்
  • பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.
  • கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.
  • அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.
  • பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பலாக்காயை சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.
  • பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.
  • பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும்.
  • பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.
    

  • பலாவிலிருந்து தயாரித்த உணவுகளை அல்லது பலாச்சுளையினை ஒரு கிலோ சாப்பிட்டால்கூட எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

  • இருப்பினும் பழுத்த பலாச்சுளை மலச்சிக்கலை குணப்படுத்தும் என்பதால் பழக்கமில்லாமல் அதிகம் சாப்பிடும்போது வழக்கத்திற்கு மாறாக வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

  • சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும்.

  • பலாவிலுள்ள தாவர உயிர்ச்சத்துகள் புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதற்கும், அணுக்களுக்கு உயிரூட்டம் கொடுத்து என்றும் இளமையான தோற்றத்தையும் கொடுக்கும்.

  • பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது.

  • வெறும் பலாப்பலத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.

  • பலாவில் உள்ள சத்துக்கள்

  • பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.

  • நரம்புகளை உறுதியாக்கும்

  • வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும். வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும். ரத்தத்தை விருத்தியாக்கும். பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தொற்றுக்கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.

தினம் ஒரு மூலிகை - கழற்சிக்காய்

கழற்சிக்காய்






தாவரங்களில் மரம், செடி, கொடி, கிழங்கு என பலவகைகள் உள்ளன. இதில் பிற மரங்களையோ அல்லது பிற பொருட்களை பற்றி வளரும் தாவரங்களை கொடிகள் எனப்படும். இந்த கொடி வகை தாவரங்களில் பல மூலிகை வகைகளை சேர்ந்ததாக இருக்கின்றன. அந்த வகையில் நமது நாட்டில் சில இடங்களில் அதிகளவில் காணப்படும் ஒரு வகை கொடி தாவரம் தான் கழற்சிக்காய். இந்த கழற்சிக்காயை தென்மாவட்டங்களில் தெலுக்காய் என்றும் அழைப்பர். இந்த கழற்சிக்காயின் இலைகள், காம்புகள், விதைகள், வேர்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த கழற்சிக்காய் பயன்பாடுகளை குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

                                                        கழற்சிக்காய் பயன்கள்


நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் மற்றும் காயங்கள் சமயங்களில் புரையோடிப்போய் நமக்கு வலுவுடன் மிகுந்த வேதனையை தரும். புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும். தழும்புகளேற்படுவதையும் தடுக்கும். வீக்கம் அடிபடுதல் மற்றும் உடலின் சில பாகங்களில் சுளுக்கு ஏற்படுவதாலும் அப்பகுதியில் அதிகளவில் வீக்கம் ஏற்படுகிறது. கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும். வயிற்று பிரச்சனைகள் பலருக்கும் அவர்களின் வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு மற்றும் இதர வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். இப்படியான நிலையிலிருப்பவர்களுக்கு கழற்சிக்காய் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும். ஈரல் நமது உடலுக்கு நோய்களை எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சுத்தன்மையை அழிப்பது போன்ற செயல்களை நமது ஈரல் செய்து வருகிறது. கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும். அதன் செயல்பாடுகளும் மேம்பாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். ஆண்கள் உடல்நலம் ஒரு சில ஆண்களுக்கு சமயங்களில் அடிபடுவதாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோஅவர்களின் விரைகள் வீங்கிவிடும். இப்படியான சமயங்களில் விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி, வடிகட்டப்பட்ட தைலத்தை வீக்கம் ஏற்பட்டுள்ள விரைகள் மீது மேல்பூச்சு மருந்தாக தடவி வந்தால் விரைவீக்கம் நீங்கும்.



தொழுநோய் என்பது ஒரு வகை கிருமி உடலில் தொற்றிக்கொண்டு கை கால் விரல்கள், மூக்கு, உதடு போன்ற உறுப்புகள் உடலின் இன்ன பிற பாகங்கள் போன்றவற்றை பாதித்து, அவற்றை அழுகி போகச்செய்யும் கொடுமையான வியாதியாகும். கழற்சிக்காய் விதைகள் சிலவற்றை கடாயில் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வறுத்து, பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தொழுநோய் கட்டுப்படும்.

யானைக்கால் வியாதி என்பது ஒரு வகை கொசு கடிப்பதால், அதனிடமிருந்து பரவும் கிருமி உடலில் தொற்றி கால்கள், நிண நீர் சுரப்பிகளையும் பாதிக்கிறது. கழற்சிக்காய் கொடிகளின் இலைகளை பக்குவம் செய்து உள்மருந்தாக சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியிருக்கும் யானைக்கால் வியாதியை பரப்பும் தொற்றுண்ணிகளை அழிக்கிறது.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல 10 க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மை இந்த கழற்சிக்காய் என்ற தெலுக்காய்க்கு உண்டு.