வல்லாரை கீரை
வல்லாரை கீரை குளம்,குட்டை,வாய்க்கால்,ஏரி போன்ற நீர் நிறைந்த பகுதியில் தன்னிச்சையாக வளரும் கீரை இனமாகும்.
மருத்துவத்தில்இதை....
இதனால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.இரணங்களை ஆற்றுகிறது.தொண்டைக்கட்டு,குரல் கம்மல், நீர்க்கடுப்பு, நீரிழிவு, சூதகக்கோளாறுகள், மலச்சிக்கல், நெறிகட்டுதல், கண்டமாலை, காய்ச்சல், வேட்டைசூடு, விரையவீகம், விரைவாதம், மேகநோய், காசம், ஈளை, சயம், பலவீனம், நியாபகமறதி, தாதுநஷ்டம், பல்நோய், பசி, தாகம், மூலச்சூடு, படை, பற்று,தே மல், நீர்ச்சுருக்கு, புகைச்சல், இதயநோய், யானைக்கால்நோய், கண் நோய், செவிநோய், குஷ்டம் போன்ற வியாதிகளை குணப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தையும் சக்தியையும் பெருக்கவல்லதாகும் வல்லாரை.
இக்கீரையில் இரும்புச்சத்து , மணிச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் விட்டமின் A & C சத்துக்களும் தாது உப்புகளும் ஏராளமாக அடங்கியுள்ளன.
பற்களில் ஏற்படும் மஞ்சள் நிறம் நீங்க இந்த இலையை கொஞ்சம் மென்று பலதேய்த்தல் நிறம் மாறி வெண்மையடையும்.
மற்ற கீரைகளைப்போலவே இந்தக் கீரையையும் சமையலில் பயன்படுத்தலாம்.
செய்முறை 1:
வல்லாரை கீரை, வில்வபட்டை, புளியரைக்கீரை இம்மூன்றையும் இடித்து சாறு எடுத்து கொண்டு ( ஒவொன்றிலும் சுமார் முக்கால் டம்ளர் சாறு தேவை) இரும்பு சட்டியை அடுப்பில் காய வைத்து அதில் 125 மில்லிகிராம் பசுநெய் விட்டு நெய் உருகியதும் இந்த மூன்று வகை சாற்றையும் அதில் ஊற்றி நன்றாக காய்ந்ததும் 200 கிராம் கற்கண்டை பொடித்து போட்டு அத்துடன் சிறிது குங்குமப்பூவும் போட்டுக் கலந்து மெழுகு பதத்தில் இறக்கவும்.
சாப்பிடும் முறை :
இதை தினசரி காலை மாலை வேளைகளில் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தை சுத்தம்செய்யும். இரத்தத்திற்கு வேண்டிய சம சத்துக்களை கொடுக்க வல்லது.
வல்லாரை கீரையையும் மிளகையும் சேர்த்து பச்சையாகவே மென்றுதின்னவேண்டும்.தினம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் சில நாட்களில் வேட்டை சூடு நீங்கும். பால்வினை நோய்களுக்கும் இது மருந்தாக அமைகிறது.
முக்கிய குறிப்பு : இக்கீரையை மருந்தாக பயன்படுத்தும்போது மாமிசம், கருவாடு, அகத்திக்கீரை, பாகற்காய், முதலியவற்றை சேர்த்துகொள்ளக்கூடாது, புளி, காரம் முதலியவற்றைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.
படிக்கும் மாணவர்கள் இதை பச்சையாக காலை வேளைகளில் மென்று தின்றுவந்தால் மூளை விருத்தியாகும்.பலம்பெறும்