திரிபலா சூரனம்
திரிபலா பொடி
நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த ஒரு பாரம்பர்ய மருந்து திரிபலா. அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
செய்முறை
கடுக்காய்த்தோல் – 100கிராம்
நெல்லிவற்றல் – 100கிராம்
தான்றிக்காய்த்தோல் – 100கிராம்
மூன்றையும் தனித்தனியாகப் பொடித்து சலித்து,சம அளவு கலந்து கொண்டால், திரிபலா சூரணம் தயார்!
அளவு: ஒன்று முதல் மூன்று கிராம் வரை
திரிபலா தரும் நன்மைகள்
- ஆரம்ப நிலை சர்க்கரை நோயர்கள்,பரம்பரையில் சர்க்கரை நோயுள்ளவர்கள், மூன்று கிராம் அளவு சூரணத்தை வெந்நீருடன் கலந்து காலை,மாலை பயன்படுத்தினால் சர்க்கரை நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
- வறட்டு இருமலினால் அவதியுறுவோர்,ஒரு கிராம் அளவு திரிபலா சூரணத்தை வெந்நீருடன் கலந்து குடிக்க நல்ல குணம் கிடைக்கும்.
- வயிற்றுவலி,நெஞ்செரிச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள்,ஒரு கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் நலம் பெறலாம்.
- மலச்சிக்கலுக்கு இரண்டு கிராம் சூரணத்தை,வெந்நீருடன் கலந்து இரவு தூங்கும் முன் பருகி நிவாரணம் பெறலாம்.
- மலம் கழிக்கையில் இரத்தம் வருதல்,பெண்களுக்கு ஏற்படும் அதிஇரத்தப்போக்கு,பௌத்திர நோயில் காணும் சலம் இவற்றிற்கு,1-2 கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து காலை-மாலை உண்ண நோய் நீங்கி நலம் பெறலாம்.
- உடற்பருமனை குறைக்க விரும்புபவர்கள்,காலை மாலை உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சூரணத்தை சுடுநீருடன் கலந்து பருகலாம்.
- 50 வயதுக்கு மேற்பட்டோர்,நோய் வராது தடுக்கும் காயகற்ப மருந்தாக திரிபலா சூரணத்தை மாலையில் உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சுடுநீருடன் கலந்து பருகலாம்.
- முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
- இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
- உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
- வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.
- ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
- கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.
- ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.
- மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.
- உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.
- பற்பொடியாக பயன்படுத்த,பற்கூச்சம்,பல்வலி,ஈறுவீக்கம் குணமாகும்.
எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?
- குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து
- மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
- வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.
- பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.
- கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக