ஞாயிறு, 8 மே, 2022

தினம் ஒரு மூலிகை : நாயுருவி கீரை

 

நாயுருவி கீரை




சாதாரணமாக மரம் செடி கொடிகளுக்கு இடையிலும் காடுகளிலும் வேலி ஓரங்களிலும் தண்ணீர் வாயும் வாய்க்கால் ஓரங்களிலும் முளைத்து வருகிறது கால்நடைகளுக்கு தீவனம் ஆகிறது

இது நீர்ப்பகுதிகளில் சுமார் 5 அடி உயரத்திற்கு வளரும் மண் வளத்திற்கு ஏற்றார் போல வளர்ந்து குட்டையாகவும் இருக்கும் இதன் தண்டு சாம்பல் நிறத்தில் சிறிது நீளமான கணுக்கள் விட்டு வளரும் கணுக்களில் வட்டமான இலைகள் சிவந்தும் பச்சை நிறமும் கொண்டது இதை வெள்ளை நாயுருவி என்பார்கள்




மற்றது கருப்பு நாயுருவியாகும் இதன் தண்டு சிறிது கருத்திருக்கும் இலைகளும் கரும்பச்சை நிறமாகவும் இருக்கும் என்றாலும் இவை இரண்டுக்கும் குணங்கள் ஒன்றே தான் நிறத்தில் வித்தியாசமே தவிர க்த்தியில் குறைந்தது அல்ல இதன் பூவும் காய்களும் கதிர்கொத்து போல ஒரே தண்டில் அடுக்கடுக்காக அரிசியை


அடுக்கியது போல இருக்கும் நாம் அருகில் சென்றால் நாம் உடைகளில் பட்டு காய்கள் ஒட்டிக்கொண்டு விடும்

இதன் இலை காய் தண்டு வேர் முதலியவை மருந்துக்கு பயன்படுகின்றன

நாயுருவி கீரையை ஆய்ந்து பூச்சி பழுப்பு நீக்கி சுத்தம் செய்து தண்ணீர் போட்டு நன்றாக அலசி எடுத்து அடுப்பில் வைத்து நெய் விட்டு வதக்க வேண்டும் அத்துடன் துவரம் பருப்பு மஞ்சள் பொடி பெருங்காயம் பூண்டு நெய் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும் பருப்பு கரைய வெந்தபின் உப்பு மிளகாய் பொடி சேர்த்து சாம்பார் ஆக்கி தாளித்துக் கொண்டால் சாதத்தோடு சாப்பிட ருசியாக இருக்கும்

இக்கீரையோடு பாசிப்பருப்பும் இஞ்சியும் கொத்தமல்லி தழை கருவேப்பிலை மிளகாய் வத்தல் கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் புளி, உப்பு முதலியவற்றை சேர்த்து நெய்யில் வதக்கி எடுத்து அரைத்து துவையலாகவோ சட்னியாகவோ தயாரித்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்

இக்கீரையை அரிந்து நெய்யில் வதக்கி தாளித்து இட்லிமாவில் கலந்து இட்லியாக வேக வைத்து சாப்பிடலாம்

பருப்போடு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை ரசமாகவும் பருப்பு கீரையோடு தாளித்து தேங்காய்ப்பூ சேர்த்து பொரியலாகவும் சாப்பிடலாம் பொரியலில் இளம் தண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்

இதன் வேரை தாய்ப்பாலில் சேர்த்து உரசி முகப்பருக்களில் பூசி வந்தால் பருக்களும் அதன் வடுக்களும் மறைந்து முகம் அழகு வரும் இதன் விதையை கழுதை பாலில் அரைத்து தினம் இரவில் முகத்தில் பூசி விடிந்ததும் பாசிப்பயிற்று மாவால் முகத்தை அலம்பி வந்தால் முதிய வயதிலும் இளமையாக காட்சி அளிக்கும்

இதன் குணம்

இது சாவை தடுக்கும் மூலிகை என்று சித்தர்களால் பாடப்பட்டது சித்தர்கள் இதன் இலைகளை பச்சையாகவே தின்றுள்ளார்கள் அதனால் ஆயுள் விருத்தியை பெற்றிருக்கிறார்கள் இதன் சுவை துவர்ப்பாக இருக்கும் உஷ்ண வீரியம் உள்ளது

தீரும் வியாதிகள்

இதில் வைட்டமின் & டி அதிகமாக காணப்படுகிறது நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு இதன் அரிசிகளை இடித்து பொடி செய்து தேன் அல்லது பசு பாலில் சாப்பிட்டு வரவேண்டும் வாரம் இருமுறை சாப்பிடலாம்

 இதன் வேர் பல்பொடி தயாரிக்க பயன்படுகிறது செடியை வேருடன் பிடுங்கி அப்படியே கழுவி பல் துலக்குவதை இப்போதும் கிராமங்களில் காணலாம் அதனால் முக வசிகரத்தை உண்டு பண்ணுகிறது

வெள்ளை நாயுருவி ஜீரண சக்தியை உண்டு பண்ணுகிறது கபத்தை போக்குகிறது மூல நோய்களை அகற்றுகிறது அரிப்பு வயிற்றுநோய்கள் ஆகிய குணமாகின்றன

கருப்பு நாயுருவியின் சுவை துவர்ப்போடு காரமும் கொண்டது ஆறாத புண்கள் கொழுப்புச்சத்து இதய நோய் வயிற்று உப்புசம் மூக்கு சம்பந்தப்பட்ட வியாதிகள் காது நோய்கள் முதலியவற்றை குணப்படுத்துகிறது

இச்செடியோடு கடுகு சேர்த்து இடித்து சாறெடுத்து தேள்கடி பூரான் கடி சிலந்தி கடிகளுக்கு இச்சாரத்தை தேய்த்துவர விஷம் நீங்கிவிடும்

நல்லெண்ணெய்யோடு இச்சாற்றை சமமாக எடுத்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து காய்ச்சி தைலம் தயாரிக்கிறார்கள் தைலம் காசம் சம்பந்தமான எல்லா நோய்களையும் தீர்க்க வல்லது மூளை முதலியவற்றை சுத்திகரிக்கிறது காது நோயை நீக்கிவிடும் செவித்தையே நீக்கும் தன்மை கொண்டது

நாயுருவி சாற்றில் சர்பத் செய்தும் சாப்பிடலாம் இதனால் தொண்டை வறட்சி சளி இருமல் பல் நோய் வாதம் வாயு தொல்லை மூச்சுக் குழல் நோய்கள் மலபந்தம் முதலியவற்றை நீக்கி ரத்தத்தை சுத்தமாகி நரம்பு மூளை தசைநார்களை வலுவடைய செய்கிறது

இதன் வேரை கசாயம் போட்டு குடிக்கலாம் மூல நோய்க்கு இதன் இலை தண்டு மிளகு மூன்றையும் தேன் விட்டு அரைத்து தினமும் காலையில் கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால் தீராத மூல நோய் தீரும்